Friday, August 17, 2012

கடவுள் வாழ்த்து - 6

குறள்:
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.
பொருள்:
மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து பொறிகளின் வழிப் பிறக்கும் தீய ஆசைகளை அழித்து கடவுளின் பொய்யற்ற ஒழுக்க நெறியை பின்பற்றி நின்றவர் நெடுங்காலம் நலமுடன் வாழ்வார்

ஞானேந்திரியங்கள்:
மெய்(உடம்பு) காற்றின் அம்சமாதலால் குளிர்ச்சி,வெப்பம்,மென்மை,வன்மை அறியும்

வாய்(நாக்கு) நீரின் அம்சமாதலால் உப்பு,புளிப்பு.இனிப்பு,கைப்பு,கார்ப்பு,துவர்ப்பு என அறுசுவையறியும்

கண் நெருப்பின் அம்சமாதலால் நிறம்,நீளம் உயரம்,குட்டை,பருமன்,மெலிவு என பத்து தன்மையறியும்

மூக்கு மண்ணின் அம்சமாதலால் வாசனை அறியும்

செவி வானின் அம்சமாதலால் ஓசையறியும்

 ஐம்புல ஆசைகளையும் ஒழித்தவன் கடவுள் எனப் போற்றப்படுகிறான். அத்தகு இறைவன் வகுத்த வாழ்க்கை நெறி வழியே (ஒழுக்க நெறியில்) தனது வாழ்க்கையினை நடத்துபவர் பிறப்பு இறப்பு இன்றி நீடுழி காலம் வாழ்வார்.

இதையேதான் வேதமும், பகவத் கீதையும் சொல்லுகிறது. வேதமும், கீதையும் குறளுக்கு முற்பட்டது என்பதால் திருவள்ளுவர் வேதவித்தகர் என்பதும் வேதத்தில் சொல்லப்பட்டிருப்பதனை எளிய இனிய தமிழில், சுருங்கக் கூறி விளங்க வைக்க முற்பட்டு அதனில் வெற்றியும் கொண்டுள்ளார் எனவும் கொள்ளலாம்.

வேதம், இறைவன் இதையெல்லாம் நம்பாதவர்கள் எனத் தங்களை உலகுக்கு விளம்பரம் செய்து கொண்டிருப்பவர்கள் கூட, குறளைத் தமிழ் மறை எனப் பேச வைத்ததும் சிறப்பான ஒன்றுதானே!

இந்த “பொறிவாயில் ஐந்தவித்தான்” என்றதன் விளக்கத்தை, அடக்கமுடமை எனும் மற்றொரு அதிகாரத்தில், புலனடக்கத்தின் சிறப்பு பற்றிக் கூறும் திருவள்ளுவர்

ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்க லாற்றின்
எழுமையும் ஏமாப்பு உடைத்து

– என்கிறார்

இதற்குப் பொருள் “ஒருவன் ஒரு பிறப்பில், ஐம்பொறிகளையும் அடக்க வல்லானாயின் அவ்வண்மை அவனுக்கு ஏழு பிறப்பிலும் நன்மையினைத் தரும்” என்பதாகும்.

இதே கருத்து கீதையில் ஸாங்க்யயோகத்தில், 55 முதல் 58 வரியிலான ஸ்லோகங்களில், “ஸ்திதப்ரக்ஞர்” என்பவரின் குணாதிசயங்களாகக் குறிப்பிடப்படுகிறது.

“எப்படி ஆமை தனது நான்கு கால்களையும், கழுத்தையும் வாலையும் தனது முதுகு ஓட்டுக்குள் ஒடுங்குமாறு உள்ளடக்கிக் கொண்டு கிடப்பதால் எதிரிகளிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்கிறதோ அது போல கர்மயோகியான ஸ்திதபிரக்ஞரும் தம் ஐம்புலன்களையும் மனத்தையும் பௌதீக விஷயத்திலிருந்து விலக்கி, தம் உள்ளுணர்வில் அடக்கிக் கொள்ளுகிறார். அந்நிலையில் அவருடைய அறிவு சமநிலையில் திடமாக இருக்கிறது.” - 58

இங்கு “பொய்தீர் ஒழுக்க நெறி நின்றார்” என்ற சொற்றொடர்கள் கவனிக்கத்தக்கது.

புலன்களின் மூலம் போகப் பொருட்களை ஏற்றுக் கொள்ளாத மனிதனுடைய புலன்நுகர் பொருட்கள்தான் விலகுகின்றன. ஆனால் அவற்றில் தங்கியுள்ள பற்றுகள் விலகுவதில்லை. இந்த மனிதனில் புலனடக்கம் பொய்யானது.

இதன் கருத்து எப்படி ஆமை மரணபயத்தால் தனது உறுப்புக்களைத் தனது ஓட்டினுள் அடக்கிக் கொள்ளுகிறதோ, அதே போல மனிதனும் நோய், பிடிவாதம், அச்சம் அல்லது வேறு ஏதேனும் காரணத்தினால் புலனடக்கம் மேர்கொண்டு எதோ ஒன்றையோ அல்லது பல போகங்களையோ விலக்கிக் கொள்ள வற்புறுத்தப்படுகிறான். மேலும் பலவிதமான சித்திகளை அடைய தவம் அல்லது தியானத்தில் இருக்கும் பொழுதும் புலனடக்கம் மேற்கொள்ளலாம். இவையெல்லாம் தாற்காலிகமானதுதான்.

உண்மையிலேயே அவனுக்கு அப்பொருட்களின் பேரிலுள்ள பற்று ஒழிவதில்லை. புலன் துடிப்புகள் போகப் பொருட்களின்பால் ஓடிக் கொண்டுதானிருக்கின்றன. புலனடக்கம் இல்லாத மனிதர் அப்புலன் அநுபவங்களுக்கு இலக்காகி உழலும் சாமானியர்களாக, பரமாத்வாவுடன் இணையும் சாதனையில் ஈடுபடாது, மதிமயங்கி மோகநித்திரையில் ஆழ்ந்திருப்பர். ஆனால் ஞானிகள் ஆத்மலயிப்பில் அமைதியுடன் ஈடுபட்டு பரமாத்ம தத்துவத்தினை அறிவதில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளுவர். இதுவே “நிர்வாண பிரும்மம்” எனும் நிலையாகும். இதையேதான் திருவள்ளுவரும் தனது குறள் மூலம் கூறுகிறார்.

ஸ்திதப்ரக்ஞனாக விரும்புகிறவன் முதலில் பற்றை அறவே ஒழிக்க வேண்டும். பிறகு எல்லாப் புலன்களையும் தம் வசத்தில் வைத்திருக்கத் தீவிர முயற்சி செய்ய வேண்டும். இறைவனே கதியென்று மனத்தை ஒருமுகப்படுத்தித் தியானத்தில் அமர்ந்தால், அவன் விரைவிலேயே பரமாத்வாவை அடைவான் என்கிறது கீதை. இறைவன் (பரமாத்மா) தரிசனம் கிடைத்தபின் எல்லாவிதமான வருத்தமும் தரக்கூடிய அறியாமை அல்லது அஞ்ஞானம் (அவித்யை) அகன்றுவிட, மனிதன் சமபுத்தி-சமநிலை சாதகனாகிறான் (ஸ்திதப்ரக்ஞனாகிறான்). ஸ்திதப்ரக்ஞனுக்கோ பரமாத்மாவை தரிசித்த பிறகு அப்பற்றும் விலகிவிடுகிறது; பரமாத்மாவும் தானும் ஒன்றென உணர்கிறான்

"அனைத்தின் உள்ளும் புறமும் பிரம்மமே விளங்குகிறது. உலகும் புறப்பொருளும் இதன் பன்மைத் தன்மை எல்லாம் பிரம்மத்தின் விளக்கங்களே. எதுவும் மாயை இல்லை" எனப் பரமாத்வைதம் என்ற நெறி அகம்-பிரமாஸ்மி என்பதாகும்.

Reference: http://www.mazhalaigal.com

Monday, August 13, 2012

கடவுள் வாழ்த்து - 5


குறள்:

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
பொருள்:
கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் (நல்வினை, தீவினை) சேர்வதில்லை.

இறைவனின் திருவடிப் பெருமையினைக் கூறும் பல குறள்களுள் இதுவும் ஒன்று. விதிவசத்தால் மாந்தர் வாழ்வில் நன்மையும் தீமையும் நடப்பது இயல்பே ஆகும். புறநானூற்றில் வரும் 'யாதும் ஊரே; யாவரும் கேளிர்' என்னும் பாடல் (எண்: 192) இக் கருத்தினையே ஆதரிக்கிறது. வள்ளுவரும் இந்த விதியினைப் பற்றி 'ஊழ்' என்னும் அதிகாரத்தில் விரிவாகக் கூறியுள்ளார். உயர்ந்த நிலையில் உள்ளோரைக் கீழ்நிலைக்கும் கீழ்நிலையில் உள்ளோரை உயர்ந்த நிலைக்கும் கொண்டு செல்லும் வல்லமை படைத்த இந்த விதியானது பிறரால் அறிய முடியாதது ஆகும். நன்மையும் தீமையும் நமக்கு அருகில் தான் மறைந்து உள்ளது விதியின் வடிவத்தில். அண்டவெளி எங்கும் இருளே நிறைந்திருப்பது போல விதியானது எல்லா இடங்களிலும் மறைந்தே இருப்பதால் விதியினை இருள் என்று உருவகப் படுத்திக் கூறுகிறார்.

விதியினை இருளாக உருவகப் படுத்திக் கூறிய வள்ளுவர் அதனை வெல்லும் வலிமை கொண்ட இறைவனின் திருவடிகளைப் பொருளாக உருவகப் படுத்திக் கூறுகிறார். இனி வள்ளுவர் கூற வரும் பொருள் இது தான்: 'இறைவன் தரும் பொருளாகிய திருவடிகளைச் சேர்ந்து சரணடைந்தவர்களிடத்து இருள் ஆகிய விதி தருகின்ற நன்மையும் தீமையும் சேர்வதில்லை.

Monday, June 4, 2012

கடவுள் வாழ்த்து - 4

குறள்:

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.
பொருள்:

(வேண்டுதல் = விருப்பம், வேண்டாமை = வெறுப்பு, அடி = கால்,
யாண்டும் = எப்பொழுதும், இடும்பை = துன்பம், இல = இல்லை)

தனக்குரிய துன்பங்களை நீக்குவதற்கு யாரை அணுகுவது? யாரை வணங்குவது? இறைவனை.

அந்த இறைவன் எத்தகையவன் என்பதற்கு விளக்கம் கொடுக்கிறார் வள்ளுவர். விருப்பு உடையவன் வேண்டியவர்களுக்குச் சலுகை காட்டுவான். வெறுப்பு உடையவன் வேண்டாதவர்களைப் பழிவாங்குவான். அவன் மனிதன். ஆனால் இந்த இரண்டும் இல்லாதவன் இறைவன். எனவே அவனிடம் நம் குறைகளை - துன்பங்களை முறையிட்டால் விருப்பு வெறுப்பு இல்லாத நிலையில் நமக்கு நன்மை விளைவிப்பான் இறைவன் என்று இறைமைக்கு விளக்கம் தருகிறார் வள்ளுவர்.

 கதை: நம்பிக்கையின் சிறப்பு.

ஒரு ஊரில் ஒரு பண்டிதர் வாழ்ந்து வ்ந்தார்.அவர்  பெரும்   கல்விமானாக இருந்தார்.சமஸ்கிருத மொழியில் மிகவும் பண்டிதராக விளங்கினார். தினமும் ஊரிலுள்ள மக்களுக்கு   பாகவதக் கதைகளைச் சொல்லி வ்ந்தார்.

அவ்வூரிலுள்ள மக்களும் இவர் சொல்லும் கதைகளைப  பிரியமாகக் கேட்டு வந்தனர்.

அக்கம் பக்கத்து ஊர்களிலிருந்தும் மக்கள் இவரைக்  கதை கூறும்படி தங்கள் ஊருக்கு அழைத்துச் சென்றனர்.

ஒரு நாள் இவர் கதை சொல்லிக் கொண்டிருக்கும்போது ஒரு திருடன் திருடுவதற்காக உள்ளே நுழைந்தான். மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கவே கூட்டத்தோடு சேர்ந்து அமர்ந்து கொண்டான்.

அன்று பாகவதம் பத்தாவது சர்க்கம். கிருஷ்ண லீலை பற்றியும் கிருஷ்ணரின் அழகை வர்ணித்தும் கதை கூறினார். அந்தக் கதையில் மெய்மறந்து அமர்ந்திருந்தான் திருடன். கதை முடிந்து கூட்டமும் கலைந்தது. பண்டிதரும் தனக்குக் கிடைத்த தட்சணைப் பணத்தை எடுத்துக் கொண்டு வீட்டுக்குப் புறப்பட்டார். சற்றுத  தொலைவு நடந்தவுடன் திருடன் அவரைப் பின் தொடர்ந்தான்.அவரிடம் இருந்த பணத்தைத் திருட எண்ணி அவர் முன் சென்று அவரை வழி மறித்தான். அச்சத்துடன் தன் பணத்தைக்  கெட்டியாகப் பிடித்துக் கொண்ட பண்டிதர் "ஏனப்பா. நான் ஏழை என்னிடம் இருக்கும் சிறு தொகையால் உனக்கு எந்தப் பயனும் இல்லை. பணக்காரராகப் பார்த்துப் போயேன்."என்றார் நடுங்கியபடியே. திருடன் சிந்தித்தான்."அப்படியானால் நீ கதையில் சொன்னாயே, அந்த ராஜகுமாரன், அவன் எங்கிருக்கிறான் சொல்.அவனிடம் அவன் அணிந்திருப்பதாக நீ சொன்ன நகைகளைக் களவாடிக் கொள்கிறேன்"என்றான்.

பண்டிதர் சிந்தித்தார்.கதையிலே தான் சொன்ன கிருஷ்ணனின் அலங்காரத்தைப் பற்றித்தான் இவன் கேட்கிறான் என்று புரிந்து கொண்டார்.கண்களை மூடி கண்ணனை வேண்டிக்கொண்டார்."கண்ணா, ஆபத்திலிருந்து நான் தப்பிக்க உன் பெயரைக் கூறுகிறேன்.

அருள்செய் கண்ணா"என்று வேண்டிக்கொண்டு.திருடனைப் பார்த்துச் சொன்னார்.

"ஆமப்பா, அந்த ராஜகுமாரன் இந்த ஊருக்கு வடக்கே ஐந்து கல் தொலைவில் உள்ள காட்டுப் பகுதிக்கு மாடுகளை மேய்த்துக் கொண்டு வருவான்.அங்கே ஒரு பாறை இருக்கும் அருகே ஒரு புன்னைமரமும் இருக்கும்.அங்குதான் மாடுகளை மேய விடுவான்."

"சரி அவன் வருகிறான் என்று நான் எப்படித் தெரிந்து கொள்வது?"

"அவன் வரும்போதே சுற்றிலும் மணம் வீசும் புல்லாங்குழலின் ஓசை கேட்கும். அப்போது அவன் வருகிறான் என்று நீ தெரிந்துகொள். சமயம் பார்த்து அவன் நகைகளைக் களவாடிக் கொள்."என்று சொன்னதைக் கேட்டு திருடன் மனம் மாறினான்.

"அப்படியானால் சரி.அவனிடம் நிறைய நகைகள் நீ சொன்னபடி கிடைத்தால் உனக்கும் பங்கு தருகிறேன்.இல்லையேல் மீண்டும் உன்னைத் தேடி நான் வருவேன்.நீ போகலாம் "

பண்டிதர் திருடன் நம்மைத் தேடி மீண்டும் வருவதற்குள் நாம் வேறு ஊருக்குப்போய் விடலாம் என்று என்ணிக் கொண்டே வேகமாக அங்கிருந்து நடந்தார்.
திருடனும் வடதிசையில்  பண்டிதர் சொன்ன இடத்தை அடைந்தான்.அவன் மனம் முழுவதும் அந்தச் சிறுவனின் தோற்றமே நிறைந்திருந்தது.அந்த ராஜகுமாரன் எப்போது வருவான் என்று ஆவலே வடிவாய் புதர் மறைவில் ஒளிந்திருந்தான்.

அதிகாலை நேரம் சற்றும் தளராமல் கண்ணனையே  எண்ணி அவன் எப்போது வருவான் எப்போது வருவான் என திசையெங்கும் சுற்றிப் பார்த்து அமர்ந்திருந்தான் அந்தத் திருடன். பசி தாகம் தூக்கம் எதையும் அவன் லட்சியம் செய்யவில்லை.வெள்ளி முளைத்தது. புள்ளினங்கள் கூவத் தொடங்கின. "என்ன இன்னும் அந்தச் சிறுவனைக் காணோமே" என்று ஏங்க ஆரம்பித்தான் திருடன்.

திடீரென்று அவன் மூக்கு நல்ல மணத்தை நுகர்ந்தது. மெல்லிய குழலோசையும் கேட்கவே அருகே இருந்த மரத்தின் மேல் ஏறி தொலைவில் பார்த்தான். அழகே வடிவாக உடம்பு நிறைய நகைகளுடன் அந்தக் கண்ணன் தெரிந்தான். வேக வேகமாக மரத்தைவிட்டு இறங்கி புதரில் மறைந்து கொண்டான்.
மாடுகளை மேயவிட்டு குழல் ஊதி யபடி புன்னை மரத்தடியில் அமர்ந்தான் அந்த ராஜகுமாரன்.

உடனே அவன் முன் தோன்றிய திருடன் அவன் முன் சென்று "ஏய் சிறுவனே உன் நகைகளைக் கொடுத்துவிடு.இல்லையேல்..."என்று மிரட்டினான்.
"வேண்டுமானால் நீயே கழற்றிக் கொள்"என்றான் கண்ணன் புன்னகையுடன்.

திருடன் வேகமாக நகைகளைக் கழற்றத் தொடங்கினான்.ஆனால்கண்ணனின்  உடலைத் தொட்டவுடன் மின்சாரம் பாய்ந்ததுபோல் உணர்ந்தான். உள்ளமும் உடலும் பரவச நிலையை அடைந்ததை உணர்ந்தான்.

அவன் முன் நின்று கூர்ந்து பார்த்தான்."நீ யாரென்று தெரியவில்லை ஆனால் உன் நகைகளைக் கழற்ற மனம் வரவில்லை. உன்னைப் பார்த்துக் கொண்டே இருக்கவேண்டும் போல் இருக்கிறது. தினமும் இதே  நேரம் வந்து நான் உன்னைப் பார்ப்பேன். நீயும் வரவேண்டும். உன் நகைகளைக் காணவில்லை என்றால்   உன் பெற்றோர் உன்னைக் கோபிப்பார்கள். வேண்டாம் "என்று கண்ணனின் முன்  அமர்ந்து அவனையே பார்க்கத தொடங்கினான் திருடன்.

"பரவாயில்லை எடுத்துக் கொள்.எங்களிடம் இன்னும் நிறைய நகைகள் உள்ளன. நாளைக்கும் தருகிறேன் "என்றபடி நகைகளைக் கொடுத்தான்.

பதில் சொல்லத் தோன்றாமல் தன்னிலை மறந்து அவைகளைப் பெற்றுக் கொண்டு ஊருக்குள் ஓடி வந்தான் அந்தத் திருடன்.

நேராக பண்டிதர் வீட்டை அடைந்தான்.அவரிடம் கண்ணன் நகைகள் கொடுத்ததைக் கூறி நகைகளைக் காட்டினான்.பண்டிதரால் நம்பமுடியவில்லை. ஆனால் நகைகளைப் பார்த்து நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.

"அந்தச் சிறுவன் எங்கே இருக்கிறான் காட்டு" என்றபடி அவனுடன் ஓடினார் பண்டிதர். அதே மரத்தடியில் அமர்ந்து குழலிசைத்துக் கொண்டிருந்தான் கண்ணன்.

"அதோ பாருங்கள்."திருடன் காட்டிய திசையில் அவருக்கு ஒன்றுமே தெரியவில்லை.

"அய்யோ என் கண்ணுக்கு நீ தெரியவில்லையே கண்ணா மணிவண்ணா இந்தப் பாமரன் செய்த புண்ணியம் நான் செய்யவில்லையா. உன்னையே சதாகாலமும் ஜபித்துக் கொண்டிருக்கும் எனக்கு தரிசனம் கொடு." பண்டிதர் அழத் தொடங்கினார். கண்ணன் புன்னகையோடு நின்றிருந்தான்.

திருடனுக்கு ஒன்றும் விளங்கவில்லை.கண்ணன் அவன் கையைப் பற்றினான்.திருடனின் அஞ்ஞானம் விலகியது. உடல் புல்லரிக்க கண்களில் நீர் மல்க கண்ணனின் பாதத்தில் வீழ்ந்தான்.

"ஐயா, பண்டிதரால்தான் உன் தரிசனம் எனக்குக் கிடைத்தது. அவருக்கும் உன் திவ்ய தரிசனத்தைக் காட்டு." என்று வேண்டிக் கொண்டான்.

"அப்படியானால் அவரது கையை நீ பற்றிக் கொள்."என்றான் கண்ணன். பண்டிதரின் கையைப் பற்றிக் கொண்டான் திருடன்.
நீலமேக வண்ணனாக அலங்கார சொரூபனாக அருள் பொங்கும் முகத்துடன் காட்சி கொடுத்தான் கண்ணன். அவர் உள்ளத்தில் தோன்றிய சந்தேகத்தைப் புரிந்து கொண்டு பேசினான் கண்ணன்.

"பண்டிதரே. உங்களுக்கு  பாண்டித்தியம் இருக்கிறது ஆனால் பக்தி இல்லை. ஆனால் திருட வந்தாலும் நம்பிக்கையும் என்னைக் காணவேண்டும் என்ற ஆசையும் கொண்டு காத்திருந்த இந்தப் பாமரனே உம்மை விட மேலானவன்.  இந்த நம்பிக்கை உம்மிடம் இல்லாததுதான் என் தரிசனம் உமக்குக் கிட்டத் தாமதமாயிற்று." என்று கூறி இருவருக்கும் ஆசி கூறி மறைந்தான் கண்ணன்.

திருடனும் தன் திருட்டுத் தொழிலைவிட்டுபண்டிதரையே தனகுருவாகக கொண்டான். இருவரும் இறைவனின் தொண்டு செய்து   இனிதே வாழ்ந்தனர்.

கடவுளை நம்பினோர் கைவிடப் படார்.எதிலும் விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை மனத்தால் எப்போதும் நினைப்பவருக்கு உலகத் துன்பம் ஒருபோதும் இல்லை

Sunday, June 3, 2012

கடவுள் வாழ்த்து - 3

குறள்:
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.
பொருள்:
மலர்போன்று மனதுக்குள் நிறைந்தவனான இறைவனின் காலடியில் அவனே கதி என்று சரணடைந்தோரின் புகழ் உலகம் உள்ளவரை இருக்கும்.

 கதை:
களங்கமற்ற, முழுமையான இறை நம்பிக்கை, இறைவனை நம்மிடம் நேரில் கொண்டு வந்து காட்டும் என் பதற்கு உதாரணமாக திகழ்ந்தவர் நம்பியாண்டார் நம்பி.

இவர், சோழ நாட்டில் தில்லையம்பலமான சிதம்பரம் அருகிலுள்ள திருநாரையூரில் அவதரித்தார். இங்குள்ள பொள்ளாப்பிள்ளையார் கோவில் மிகவும் பிரபலமானது. “பொள்ளா’ என்றால், உளியால் செதுக்கப்படாதது என்று பொருள்; அதாவது, தானாகவே தோன்றிய சுயம்பு விநாயகர் அவர்.

இந்த விநாயகருக்கு பூஜை செய்து வந்தார் நம்பியின் தந்தை; நம்பிக்கும் பூஜை முறைகளைக் கற்றுக் கொடுத் தார். ஒருநாள், அவர் தன் மனைவியுடன் வெளியூர் செல்ல இருந்ததால், மகனிடம், “இன்று, நீ போய் விநாயகருக்கு நைவேத்யம் செய்து பூஜை செய்து வா…’ என்றார்.

மகிழ்ச்சியடைந்த சிறுவன் நைவேத்திய பொருட்களுடன் கோவிலுக்குச் சென்றான். விநாயகரை வணங்கி நைவேத்யத் தைப் படைத்தான்.

“அப்பனே, விநாயகா! நான் சின்னஞ்சிறுவன். அப்பா ஊருக் குப் போய் விட்டார். உனக்கு தேங்காய், பழம், பொங்கல் கொண்டு வந்திருக்கிறேன். ஒன்று விடாமல் சாப்பிடு. குருகுலத்துக்கு கிளம்ப வேண்டும். தாமதமாகச் சென்றால், ஆசிரியர் கோபிப்பார். விரைவில் சாப்பிடப்பா…’ என்றான்.

பிள்ளையார் என்றாவது சாப்பிட்டதுண்டா?

அவர் கல்லாக அப்படியே உட்கார்ந்திருந்தார். பையனுக்கு அழுகை வந்தது…

“இதோ பார்! நீ மட்டும் இப்போது சாப்பிடாவிட்டால் இந்தத் தூணில் முட்டி மோதி இறப்பேன்…’ என்று சொல்லியபடியே, தூணில் முட்டி அழுதான்.

அவனது களங்கமற்ற பக்தி விநாயகரை ஈர்த்தது. அவர் சன்னதியில் இருந்து எழுந்து வந்து, அவனைத் தடுத்து நிறுத்தினார். தும்பிக்கையால் நெற்றியில் வழிந்த ரத்தத்தைத் துடைக்க, காயம்பட்ட வடுவே மறைந்து விட்டது. நம்பியின் விருப்பப்படியே அத்தனை பொருட்களையும் ஒன்று விடாமல் சாப்பிட்டார்.


அவரிடம், “விநாயகா! எப் படியோ இன்று குருகுலம் செல்ல நேரமாகி விட்டது. நான் அங்கு சென்றிருந்தால் அவர் என்ன கற்றுக் கொடுத்திருப் பாரோ, அதை நீயே சொல்லிக் கொடேன்…’ என்றார் நம்பி.

அவனுக்கு அனைத்து ஞானத் தையும் போதித்து, மறைந்து விட்டார் விநாயகர்.

மகிழ்ச்சியுடன் வீட்டுக்கு வந்தான் நம்பி. பெற்றவர்கள் ஊர் திரும்பியதும் நடந்ததையெல்லாம் சொன்னான். அவர் கள் அடைந்த ஆனந்தத்துக்கு அளவே இல்லை. இந்த விஷயம் ராஜராஜசோழனுக்கு எட்டியது. அவன் நம்பியாண்டார் நம்பியின் இல்லத்துக்கே வந்துவிட்டான். விநாயகருக்கு நைவேத்யம் செய்து அவர் சாப்பிடுவதைக் கண்ணார கண்டு களிக்க வேண்டும் என்றான்.

அதன்படியே, கோவிலுக்குச் சென்று விநாயகரை சாப்பிட வைத்தார் நம்பி. மன்னனும், மக்களும் ஆச்சரியப் பட்டனர். அவரது மகிமையை உணர்ந்த மன்னன், தில்லையம்பலத்தில் பூட்டிக் கிடக்கும் அறையில் மூவர் பாடிய தேவாரமும், தொகையடியார்கள் வரலாறும் இருப்பதைச் சொல்லி, அவற்றை வெளியே கொண்டு வர ஆவன செய்யும்படி கேட்டுக் கொண்டான்.

அதன்படி, அவர்கள் அங்கு சென்று புற்று மண்டிக்கிடந்த அறையில் இருந்து ஓலைச்சுவடிகளை எடுத்து வந்தனர். நம்பியாண்டர் நம்பி அவற்றை 11 திருமுறைகளாகப் பிரித்தார். அவை இன்றும் நமக்கு இசையின்பத்தை வழங்கிக் கொண்டிருக்கின்றன.

குழந்தை போல களங்கமற்ற உள்ளங்களுக்கு கடவுள் தெரிவான் என்பதை நம்பியாண்டார் நம்பி வரலாறு உணர்த்துகிறது.

Saturday, June 2, 2012

கடவுள் வாழ்த்து - 2


குறள்:
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.

பொருள்:
தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவன் கற்றிருந்தாலும் அதனால் பயன் ஒன்றுமில்லை.

வாலறிவன் - என்ற சொல்லுக்கு மெய்யுணர்ந்த இறைவன் (ஞானி) என்ற பொருளும் உண்டு. நிறைய கற்றவர் கடவுளுக்கு ஒப்பாக போற்றப்படுவர். ஆகையால் அவரை வணங்குதல், கடவுளை வணங்குவதற்கு சமம்

கதை:
ஒரு மாணவன் அனைத்து விதமான சண்டைகளையும்/தற்காப்பு களையும் தெரிந்த குருவிடம் பாடம் பயில சென்றானாம். குருவும் தனக்கு தெரிந்த அத்தனை வித்தைகளையும் கற்றுக்கொடுத்துள்ளார்.

நாட்டில் நடைபெறும் அனைத்து போட்டிகளிலும் (சண்டை சம்மந்தமான) வெற்றியும் பெற்றானாம். ஒரு நாள் தன்னுடைய குருவே போட்டிக்கு அழைத்தானாம். (இதைத்தான் வள்ளுவர் கூடாது என்கிறார்)

குரு மனம் கலங்கி வீட்டில் உட்காந்திருக்கிறார்.

அவருடைய மனைவி: ஏன் இப்படி கவலையுடன் உள்ளீர்கள்?

குரு: நான் எனக்கு தெரிந்த அனைத்து வித்தைகளையும் கற்றுக்கொடுத்துவிட்டேன், என் மாணவனோ இளைஞன், எனக்கோ வயதாகி விட்டது என்னால் அவனை வெற்றிபெற முடியாது என்றார்.

அவருடைய மனைவி:  கையில் ஒரு கரண்டியை கொடுத்து இப்போது போங்கள், அந்த மாணவனை தைரியமாக சண்டைக்கு கூப்பிடுங்கள் என்றாராம். குருவும் அவ்வாறே செய்தாராம்.

சண்டைகளத்தில்: குரு தன்னுடைய மாணவனை பார்த்து சொன்னாராம், நான் எனக்கு தெரிந்த அனைத்து வித்தைகளையும் கற்றுக்கொடுத்துவிட்டேன், ஆனால் இந்த வித்தையை மற்றும் கற்று கொடுக்கவில்லை என்றார் (உண்மையில் அவருக்கு கரண்டியை வைத்து எந்த சண்டையும் தெரியாது, தன்னுடைய மாணவனின் கர்வத்தை நீக்கவே இந்த ஏற்பாடு)

மாணவன்: அய்யா என்னை மன்னித்து விடுங்கள். எல்லாம் கற்றுவிட்டேன் என்ற இறுமாப்பு என் கண்ணை மறைத்து விட்டது. என்னுடைய குருவே நான் சண்டைக்கு அழைத்தது பெரும் தவறு என்று காலில் விழுந்துவிட்டான்.

Friday, June 1, 2012

கடவுள் வாழ்த்து - 1

குறள்:
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
பொருள்:
'எழுத்துக்களுக்கெல்லாம் 'அ' முதலானதாயிருப்பதுபோல உலகுக்கு இறைவன் முதல்வனாக இருக்கிறான்.'

"அகரம்" என்றால் புள்ளி என்று பொருள்.எல்லா எழுத்துக்களும் புள்ளியை முதலாக கொண்டே எழுகின்றன.வரிவடிவங்களுக்கு முதலெழுத்து புள்ளி.(புறத்தில்).  எழுத்துக்கள் இல்லாத மொழிகளும் புள்ளியையே ஆதாரமாக கொண்டே எழுகிறது. எவ்வாறெனில் வாயிலிருந்து வார்த்தையாய் வெளிவருவதற்கு முன் அது எண்ணமாய் இருந்தது.
எண்ணம் நினைவு என்ற புள்ளியிலிருந்து தோன்றுகின்றது. இந்த நினைவே அகரம் என்றழைக்கப்படுகிறது.(அகத்தில்)

(அகர முதல=அகர ம்+உதல,உதலம்=உலகம்)
அகரம் என்றால் நினைவு.உதலம் என்றால் உலகம்.

நான் உள்ளவரை உலகம் உண்டு.உலகம் உள்ளவரை நான் உண்டு. என்னையும் உலகத்தையும் பிணைக்கின்ற சக்தி ஒன்றும் உண்டு.அதுவே ஆதி. இந்த ஆதியை முதலாக கொண்டே உலகமும் நானும்.

அவன் அவள் அதுவெனும் அவை மூவினைமையின்
தோற்றிய திதியே ஒடுங்கி மலத்து உளதாம்
அந்தம் ஆதி என்மனார் புலவர்.

கதை:
மனிதக் குரங்குகள் குரங்கு மனிதர்களாய் வாழ்ந்த காலமது.

மலைஅடிவாரத்தில், குகைகளுக்குள், மிருகத்தோலாடைகளுடன் வாழ்ந்துவந்தனர் அவர்கள். சைகையும் ஒலிகளும் நிறைந்த மொழி ஒன்றைப் பேசினர். இயற்கைக்கு அஞ்சி நடுங்கினர். குழுவாக வேட்டையாடி கிடைப்பதை ஒன்றாய் பகிர்ந்தனர்.

வயதானப் பெண் ஒருத்தி ஒருநாள் இந்தக் கூட்டத்தைவிட்டுப் பிரிந்தாள். நெடுந்தூரம் நடந்தாள். மலையின் உச்சியை அடைந்து இயற்கையை கவனிக்கத் துவங்கினாள்.
வானின் நட்சத்திரங்களைக் கணக்கெடுத்தாள். பூமியின் சுழற்சியை கண்டுகொண்டாள். செடிகொடி வளர்ப்பதை தெரிந்துகொண்டாள். தீயை உருவாக்கி கட்டுக்குள் வைத்திருக்கப் பழகினாள். கோள்களின் பாதையைப் புரிந்துகொண்டாள். காட்டில் விளைபவைகளில் விஷத்தையும் உணவையும் பிரித்தறியும் அபூர்வ உணர்வு அவளுக்கிருந்தது. பல ஆண்டுகள் கழித்து இயற்கைபற்றிய பயம் நீங்கியவளாய் மலையிலிருந்து கீழிறங்கினாள்.

தொலைந்துபோனவள் திரும்ப வருவதை வேடிக்கையாய் பார்த்தனர் கீழிருந்தவர்கள். அவளிடம் ஏதோ மாற்றம் தெரிந்தது. அவள் முகம் ஒளியில் மிதப்பதைப் போலொரு பிரம்மை மேற்கொண்டது.

மக்களைப் பார்த்ததும் கைகால்களை அசைத்து ஒருவகை நாட்டியமாடினாள் இவள். இதுவரை அவர்கள் அறிந்திராதது அந்த நாட்டியம்.

"உண்மைகளை அறிந்துகொண்டேன்" என்றாள்.

"சொல்" என்றனர், சிலர் ஏளனத்துடனே.

"சொல்லொண்ணா பேரின்பம்." என்றாள்.

"பைத்தியக்காரி." என்றனர்.

"ஆமாம். அசாதாரணச் சிந்தனை கொண்டவர்கள் பைத்தியங்கள்தான்." என்றாள்.

"அவளை விடுங்கள்." பெரியவர் ஒருவர் முன்வந்தார்."உனக்கு ஏதோ தெரிந்திருக்கிறது. சொல் அதை எங்களுக்கும்."

"இயற்கை." என்றாள்

"விளக்கு." என்றார்.

அவளுக்குப் புரிந்ததைச் சொன்னாள். புரியாமல் விழித்தனர் மக்கள்.

"புரியச்செய்". என்றனர்.

கதைகளாகச் சொன்னாள் அவள் கண்டவைகளை.

"எப்படி நம்புவோம் உன்னை?" என்றனர்.

"நாளை பகலில் இரவு தோன்றும் பாருங்கள்." என்றாள்.

கேலி செய்தனர் அவளை. கல்லால் எறிந்து கொல்வோம் என்றனர். நாளைவரை பொறுத்திருக்கச் சொன்னார் பெரியவர்.

அந்த சூரியக் கிரகண நாளுக்குப்பின் உலகின் முதல் மதம் தோன்றியது. 

Wednesday, May 23, 2012

Sunday, May 20, 2012

Wednesday, May 16, 2012

காமத்துப்பால்

வள்ளுவப் பெருந்தகை இன்பத்துப்பாலில் தலைவன், தலைவிக்கும் இடையில் நடக்கும் உன்னத உறவு, ஊடல் மற்றும் கூடல்களை பற்றி விளக்கியுள்ளார்


திருவள்ளுவர், இன்பத்துப்பால் (அ)  காமத்துப்பால் பகுதியை  கீழ்காணும் இயல்களாக பகுத்துள்ளார்.

    களவியல்
    கற்பியல்

Tuesday, May 15, 2012

பொருட்பால்

"பொருட்பால்" திருக்குறளில் முப்பால்களில் இரண்டாம் 'பால்' ஆகும். இவ்வுலகத்தில் உள்ள பலதர பட்டசெயல்களில் உள்ள பொருள்களை இப்பாலில் மிக அருமையாக விளக்கியுள்ளார்.

பொருள் அல்லது பொருட்பால் பகுதியை திருவள்ளுவர் கீழ்காணும் இயல்களாக பகுத்துள்ளார்.

    அரசியல்
    அமைச்சியல்
    அரணியல்
    கூழியல்
    படையில்
    நட்பியல்
    குடியியல்

Monday, May 14, 2012

அறத்துப்பால்

அறம் என்பது வாழ்க்கையில் கடைப்பிடித்து ஒழுக வேண்டிய ஒழுக்கமே என்று திருவள்ளுவரால் வகுக்கப்பட்டிருக்கிறது.

இவ்வொழுக்கமாகிய அறத்தை மேலும் இல்லறம், துறவறம் என்று இருவகை நிலையால் விளக்குகின்றார். இதிலும் இல்லறத்தை முன்னரும் துறவறம் என்பதைப் பின்னரும் கூறியமையும் வள்ளுவனாரின் அறம் பற்றிய ஒப்பற்ற வாழ்வியல் நுண்ணறிவுத் தத்துவம் புலப்படும்.

அறத்துப்பாலில் உள்ள குறள் இயல்கள்:-
    பாயிரவியல்
    இல்லறவியல்
    துறவறவியல்
    ஊழியல்

Sunday, May 13, 2012

133 . ஊடலுவகை

1321. இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல்
வல்லது அவர்அள஧க்கு மாறு.

1322. ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளி
வாடினும் பாடு பெறும்.

1323. புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு
நீரியைந் தன்னார் அகத்து.

1324. புல்லி விடாஅப் புலவியுள் தோன்றுமென்
உள்ளம் உடைக்கும் படை.

1325. தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள்
அகறலின் ஆங்கொன் றுடைத்து.

1326. உணலினும் உண்டது அறல்இனிது காமம்
புணர்தலின் ஊடல் இனிது.

1327. ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும்
கூடலிற் காணப் படும்.

1328. ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக்
கூடலில் தோன்றிய உப்பு.

1329. ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப
நீடுக மன்னோ இரா.

1330. ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்.

Saturday, May 12, 2012

132 . புலவி நுணுக்கம்

1311. பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர்
நண்ணேன் பரத்தநின் மார்பு.

1312. ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை
நீடுவாழ் கென்பாக் கறிந்து.

1313. கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்
காட்டிய சூடினீர் என்று.

1314. யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்
யாரினும் யாரினும் என்று.

1315. இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்
கண்நிறை நீர்கொண் டனள்.

1316. உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப்
புல்லாள் புலத்தக் கனள்.

1317. வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்
யாருள்ளித் தும்மினீர் என்று.

1318. தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல்
எம்மை மறைத்திரோ என்று.

1319. தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும்நீர்
இந்நீரர் ஆகுதிர் என்று.

1320. நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர்
யாருள்ளி நோக்கினீர் என்று.

Friday, May 11, 2012

131 . புலவி

1301. புல்லா திராஅப் புலத்தை அவர்உறும்
அல்லல்நோய் காண்கம் சிறிது.

1302. உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது
மிக்கற்றால் நீள விடல்.

1303. அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப்
புலந்தாரைப் புல்லா விடல்.

1304. ஊடி யவரை உணராமை வாடிய
வள்ளி முதலரிந் தற்று.

1305. நலத்தகை நல்லவர்க்கு ஏஎர் புலத்தகை
பூஅன்ன கண்ணார் அகத்து.

1306. துனியும் புலவியும் இல்லாயின் காமம்
கனியும் கருக்காயும் அற்று.

1307. ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது
நீடுவ தன்றுகொல் என்று.

1308. நோதல் எவன்மற்று நொந்தாரென்று அஃதறியும்
காதலர் இல்லா வழி.

1309. நீரும் நிழலது இனிதே புலவியும்
வீழுநர் கண்ணே இனிது.

1310. ஊடல் உணங்க விடுவாரோடு என்நெஞ்சம்
கூடுவேம் என்பது அவா.

Thursday, May 10, 2012

130 . நெஞ்சொடுபுலத்தல்

1291. அவர்நெஞ்சு அவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே
நீஎமக்கு ஆகா தது.

1292. உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச்
செறாஅரெனச் சேறியென் நெஞ்சு.

1293. கெட்டார்க்கு நட்டார்இல் என்பதோ நெஞ்சேநீ
பெட்டாங்கு அவர்பின் செலல்.

1294. இனிஅன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே
துனிசெய்து துவ்வாய்காண் மற்று.

1295. பெறாஅமை அஞ்சும் பெறின்பிரிவு அஞ்சும்
அறாஅ இடும்பைத்தென் நெஞ்சு.

1296. தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்
தினிய இருந்ததென் நெஞ்சு.

1297. நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாஎன்
மாணா மடநெஞ்சிற் பட்டு.

1298. எள்ளின் இளிவாம்என்று எண்ணி அவர்திறம்
உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு.

1299. துன்பத்திற்கு யாரே துணையாவார் தாமுடைய
நெஞ்சந் துணையல் வழி.

1300. தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடைய
நெஞ்சம் தமரல் வழி.

Wednesday, May 9, 2012

129 . புணர்ச்சிவிதும்பல்

1281. உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கில் காமத்திற் குண்டு.

1282. தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும்
காமம் நிறைய வரின்.

1283. பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக்
காணா தமையல கண்.

1284. ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து
கூடற்கண் சென்றதுஎன் னெஞ்சு.

1285. எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்
பழிகாணேன் கண்ட இடத்து.

1286. காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்
காணேன் தவறல் லவை.

1287. உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்
பொய்த்தல் அறிந்தென் புலந்து.

1288. இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக்
கள்ளற்றே கள்வநின் மார்பு.

1289. மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்
செவ்வி தலைப்படு வார்.

1290. கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல்
என்னினும் தான்விதுப் புற்று.

Tuesday, May 8, 2012

128 . குறிப்பறிவுறுத்தல்

1271. கரப்பினுங் கையிகந் தொல்லாநின் உண்கண்
உரைக்கல் உறுவதொன் றுண்டு.

1272. கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப்
பெண்நிறைந்த நீர்மை பெரிது.

1273. மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தை
அணியில் திகழ்வதொன்று உண்டு.

1274. முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை
நகைமொக்குள் உள்ளதொன் றுண்டு.

1275. செறிதொடி செய்திறந்த கள்ளம் உறுதுயர்
தீர்க்கும் மருந்தொன்று உடைத்து.

1276. பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல் அரிதாற்றி
அன்பின்மை சூழ்வ துடைத்து.

1277. தண்ணந் துறைவன் தணந்தமை நம்மினும்
முன்னம் உணர்ந்த வளை.

1278. நெருநற்றுச் சென்றார்எம் காதலர் யாமும்
எழுநாளேம் மேனி பசந்து.

1279. தொடிநோக்கி மென்தோளும் நோக்கி அடிநோக்கி
அஃதாண் டவள்செய் தது.

1280. பெண்ணினால் பெண்மை உடைத்தென்ப கண்ணினால்
காமநோய் சொல்லி இரவு.

Monday, May 7, 2012

127 . அவர்வயின்விதும்பல்

1261. வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற
நாளொற்றித் தேய்ந்த விரல்.

1262. இலங்கிழாய் இன்று மறப்பின்என் தோள்மேல்
கலங்கழியும் காரிகை நீத்து.

1263. உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்
வரல்நசைஇ இன்னும் உளேன்.

1264. கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக்
கோடுகொ டேறுமென் நெஞ்சு.

1265. காண்கமன் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின்
நீங்கும்என் மென்தோள் பசப்பு.

1266. வருகமன் கொண்கன் ஒருநாள் பருகுவன்
பைதல்நோய் எல்லாம் கெட.

1267. புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல்
கண்அன்ன கேளிர் விரன்.

1268. வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து
மாலை அயர்கம் விருந்து.

1269. ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார்
வருநாள்வைத்து ஏங்கு பவர்க்கு.

1270. பெறின்என்னாம் பெற்றக்கால் என்னாம் உறினென்னாம்
உள்ளம் உடைந்துக்கக் கால்.

Sunday, May 6, 2012

126 . நிறையழிதல்

1251. காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும்
நாணுத்தாழ் வீழ்த்த கதவு.

1252. காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை
யாமத்தும் ஆளும் தொழில்.

1253. மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றித்
தும்மல்போல் தோன்றி விடும்.

1254. நிறையுடையேன் என்பேன்மன் யானோஎன் காமம்
மறையிறந்து மன்று படும்.

1255. செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய்
உற்றார் அறிவதொன்று அன்று.

1256. செற்றவர் பின்சேறல் வேண்டி அளித்தரோ
எற்றென்னை உற்ற துயர்.

1257. நாணென ஒன்றோ அறியலம் காமத்தால்
பேணியார் பெட்ப செயின்.

1258. பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம்
பெண்மை உடைக்கும் படை.

1259. புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம்
கலத்தல் உறுவது கண்டு.

1260. நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு உண்டோ
புணர்ந்தூடி நிற்பேம் எனல்.

Saturday, May 5, 2012

125 . நெஞ்சொடுகிளத்தல்

1241. நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும்
எவ்வநோய் தீர்க்கும் மருந்து.

1242. காதல் அவரிலர் ஆகநீ நோவது
பேதைமை வாழியென் நெஞ்சு.

1243. இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல்
பைதல்நோய் செய்தார்கண் இல்.

1244. கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத்
தின்னும் அவர்க்காணல் உற்று.

1245. செற்றார் எனக்கை விடல்உண்டோ நெஞ்சேயாம்
உற்றால் உறாஅ தவர்.

1246. கலந்துணர்த்தும் காதலர்க் கண்டாற் புலந்துணராய்
பொய்க்காய்வு காய்திஎன் நெஞ்சு.

1247. காமம் விடுஒன்றோ நாண்விடு நன்னெஞ்சே
யானோ பொறேன்இவ் விரண்டு.

1248. பரிந்தவர் நல்காரென்று ஏங்கிப் பிரிந்தவர்
பின்செல்வாய் பேதைஎன் நெஞ்சு.

1249. உள்ளத்தார் காத லவரால் உள்ளிநீ
யாருழைச் சேறியென் நெஞ்சு.

1250. துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா
இன்னும் இழத்தும் கவின்.

Friday, May 4, 2012

124 . உறுப்புநலனழிதல்

1231. சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி
நறுமலர் நாணின கண்.

1232. நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்
பசந்து பனிவாரும் கண்.

1233. தணந்தமை சால அறிவிப்ப போலும்
மணந்தநாள் வீங்கிய தோள்.

1234. பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித்
தொல்கவின் வாடிய தோள்.

1235. கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு
தொல்கவின் வாடிய தோள்.

1236. தொடியொடு தோள்நெகிழ நோவல் அவரைக்
கொடியர் எனக்கூறல் நொந்து.

1237. பாடுபெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென் வாடுதோட்
பூசல் உரைத்து.

1238. முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது
பைந்தொடிப் பேதை நுதல்.

1239. முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற
பேதை பெருமழைக் கண்.

1240. கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே
ஒண்ணுதல் செய்தது கண்டு.

Thursday, May 3, 2012

123 . பொழுதுகண்டிரங்கல்

1221. மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும்
வேலைநீ வாழி பொழுது.

1222. புன்கண்ணை வாழி மருள்மாலை எம்கேள்போல்
வன்கண்ண தோநின் துணை.

1223. பனிஅரும்பிப் பைதல்கொள் மாலை துனிஅரும்பித்
துன்பம் வளர வரும்.

1224. காதலர் இல்வழி மாலை கொலைக்களத்து
ஏதிலர் போல வரும்.

1225. காலைக்குச் செய்தநன்று என்கொல் எவன்கொல்யான்
மாலைக்குச் செய்த பகை.

1226. மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத
காலை அறிந்த திலேன்.

1227. காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலரும்இந் நோய்.

1228. அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்
குழல்போலும் கொல்லும் படை.

1229. பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு
மாலை படர்தரும் போழ்து.

1230. பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை
மாயும்என் மாயா உயிர்.

Wednesday, May 2, 2012

122 . கனவுநிலையுரைத்தல்

1211. காதலர் தூதொடு வந்த கனவினுக்கு
யாதுசெய் வேன்கொல் விருந்து.

1212. கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க்கு
உயலுண்மை சாற்றுவேன் மன்.

1213. நனவினால் நல்கா தவரைக் கனவினால்
காண்டலின் உண்டென் உயிர்.

1214. கனவினான் உண்டாகும் காமம் நனவினான்
நல்காரை நாடித் தரற்கு.

1215. நனவினால் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான்
கண்ட பொழுதே இனிது.

1216. நனவென ஒன்றில்லை ஆயின் கனவினால்
காதலர் நீங்கலர் மன்.

1217. நனவினால் நல்காக் கொடியார் கனவனால்
என்எம்மைப் பீழிப் பது.

1218. துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால்
நெஞ்சத்தர் ஆவர் விரைந்து.

1219. நனவினால் நல்காரை நோவர் கனவினால்
காதலர்க் காணா தவர்.

1220. நனவினால் நம்நீத்தார் என்பர் கனவினால்
காணார்கொல் இவ்வூ ரவர்.

Tuesday, May 1, 2012

121 . நினைந்தவர்புலம்பல்

1201. உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்
கள்ளினும் காமம் இனிது.

1202. எனைத்தொன்று ஏனிதேகாண் காமம்தாம் வீழ்வார்
நினைப்ப வருவதொன்று ஏல்.

1203. நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல்
சினைப்பது போன்று கெடும்.

1204. யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத்து எந்நெஞ்சத்து
ஓஒ உளரே அவர்.

1205. தம்நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார் நாணார்கொல்
எம்நெஞ்சத்து ஓவா வரல்.

1206. மற்றியான் என்னுளேன் மன்னோ அவரொடியான்
உற்றநாள் உள்ள உளேன்.

1207. மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன்
உள்ளினும் உள்ளம் சுடும்.

1208. எனைத்து நினைப்பினும் காயார் அனைத்தன்றோ
காதலர் செய்யும் சிறப்பு.

1209. விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார்
அளியின்மை ஆற்ற நினைந்து.

1210. விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப்
படாஅதி வாழி மதி.

Monday, April 30, 2012

120 . தனிப்படர்மிகுதி

1191. தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே
காமத்துக் காழில் கனி.

1192. வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு
வீழ்வார் அளிக்கும் அளி.

1193. வீழுநர் வீழப் படுவார்க்கு அமையுமே
வாழுநம் என்னும் செருக்கு.

1194. வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார்
வீழப் படாஅர் எனின்.

1195. நாம்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ
தாம்காதல் கொள்ளாக் கடை.

1196. ஒருதலையான் இன்னாது காமம்காப் போல
இருதலை யானும் இனிது.

1197. பருவரலும் பைதலும் காணான்கொல் காமன்
ஒருவர்கண் நின்றொழுகு வான்.

1198. வீழ்வாரின் இன்சொல் பெறாஅது உலகத்து
வாழ்வாரின் வன்கணார் இல்.

1199. நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்டு
இசையும் இனிய செவிக்கு.

1200. உறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய் கடலைச்
செறாஅஅய் வாழிய நெஞ்சு.

Sunday, April 29, 2012

119 . பசப்புறுபருவரல்

1181. நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென்
பண்பியார்க்கு உரைக்கோ பிற.

1182. அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்தென்
மேனிமேல் ஊரும் பசப்பு.

1183. சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா
நோயும் பசலையும் தந்து.

1184. உள்ளுவன் மன்யான் உரைப்பது அவர்திறமால்
கள்ளம் பிறவோ பசப்பு.

1185. உவக்காண்எம் காதலர் செல்வார் இவக்காண்என்
மேனி பசப்பூர் வது.

1186. விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன்
முயக்கற்றம் பார்க்கும் பசப்பு.

1187. புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில்
அள்ளிக்கொள் வற்றே பசப்பு.

1188. பசந்தாள் இவள்என்பது அல்லால் இவளைத்
துறந்தார் அவர்என்பார் இல்.

1189. பசக்கமன் பட்டாங்கென் மேனி நயப்பித்தார்
நன்னிலையர் ஆவர் எனின்.

1190. பசப்பெனப் பேர்பெறுதல் நன்றே நயப்பித்தார்
நல்காமை தூற்றார் எனின்.

Saturday, April 28, 2012

118 . கண்விதுப்பழிதல்

1171. கண்தாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய்
தாம்காட்ட யாம்கண் டது.

1172. தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப்
பைதல் உழப்பது எவன்.

1173. கதுமெனத் தாநோக்கித் தாமே கலுழும்
இதுநகத் தக்க துடைத்து.

1174. பெயலாற்றா நீருலந்த உண்கண் உயலாற்றா
உய்வில்நோய் என்கண் நிறுத்து.

1175. படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றாக்
காமநோய் செய்தஎன் கண்.

1176. ஓஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண்
தாஅம் இதற்பட் டது.

1177. உழந்துழந் துள்நீர் அறுக விழைந்திழைந்து
வேண்டி அவர்க்கண்ட கண்.

1178. பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க்
காணாது அமைவில கண்.

1179. வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை
ஆரஞர் உற்றன கண்.

1180. மறைபெறல் ஊரார்க்கு அரிதன்றால் எம்போல்
அறைபறை கண்ணார் அகத்து.

Friday, April 27, 2012

117 . படர்மெலிந்திரங்கல்


1161. மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்கு
ஊற்றுநீர் போல மிகும்.

1162. கரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க்கு
உரைத்தலும் நாணுத் தரும்.

1163. காமமும் நாணும் உயிர்காவாத் தூங்கும்என்
நோனா உடம்பின் அகத்து.

1164. காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும்
ஏமப் புணைமன்னும் இல்.

1165. துப்பின் எவனாவர் மன்கொல் துயர்வரவு
நட்பினுள் ஆற்று பவர்.

1166. இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால்
துன்பம் அதனிற் பெரிது.

1167. காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்
யாமத்தும் யானே உளேன்.

1168. மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திரா
என்னல்லது இல்லை துணை.

1169. கொடியார் கொடுமையின் தாம்கொடிய விந்நாள்
நெடிய கழியும் இரா.

1170. உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர்
நீந்தல மன்னோஎன் கண்.

Thursday, April 26, 2012

116 . பிரிவாற்றாமை


1151. செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க் குரை.

1152. இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும்
புன்கண் உடைத்தால் புணர்வு.

1153. அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும்
பிரிவோ ரிடத்துண்மை யான்.

1154. அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல்
தேறியார்க்கு உண்டோ தவறு.

1155. ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர்
நீங்கின் அரிதால் புணர்வு.

1156. பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிதவர்
நல்குவர் என்னும் நசை.

1157. துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை
இறைஇறவா நின்ற வளை.

1158. இன்னாது இனன்இல்ஊர் வாழ்தல் அதனினும்
இன்னாது இனியார்ப் பிரிவு.

1159. தொடிற்சுடின் அல்லது காமநோய் போல
விடிற்சுடல் ஆற்றுமோ தீ.

1160. அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப்
பின்இருந்து வாழ்வார் பலர்.

Wednesday, April 25, 2012

115 . அலரறிவுறுத்தல்

1141. அலரெழ ஆருயிர் ந஧ற்கும் அதனைப்
பலரறியார் பாக்கியத் தால்.

1142. மலரன்ன கண்ணாள் அருமை அறியாது
அலரெமக்கு ஈந்ததிவ் வூர்.

1143. உறாஅதோ ஊரறிந்த கெளவை அதனைப்
பெறாஅது பெற்றன்ன நீர்த்து.

1144. கவ்வையால் கவ்விது காமம் அதுவின்றேல்
தவ்வென்னும் தன்மை இழந்து.

1145. களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்
வெளிப்படுந் தோறும் இனிது.

1146. கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்
திங்களைப் பாம்புகொண் டற்று.

1147. ஊரவர் கெளவை எருவாக அன்னைசொல்
நீராக நீளும்இந் நோய்.

1148. நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கெளவையால்
காமம் நுதுப்பேம் எனல்.

1149. அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம்பு என்றார்
பலர்நாண நீத்தக் கடை.

1150. தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும்
கெளவை எடுக்கும்இவ் வூர்.

Tuesday, April 24, 2012

114 . நாணுத்துறவுரைத்தல்

1131. காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம்
மடலல்லது இல்லை வலி.

1132. நோனா உடம்பும் உயிரும் மடலேறும்
நாணினை நீக்கி நிறுத்து.

1133. நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்
காமுற்றார் ஏறும் மடல்.

1134. காமக் கடும்புனல் உய்க்கும் நாணொடு
நல்லாண்மை என்னும் புணை.

1135. தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு
மாலை உழக்கும் துயர்.

1136. மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற
படல்ஒல்லா பேதைக்கென் கண்.

1137. கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்
பெண்ணின் பெருந்தக்க தில்.

1138. நிறையரியர் மன்அளியர் என்னாது காமம்
மறையிறந்து மன்று படும்.

1139. அறிகிலார் எல்லாரும் என்றேஎன் காமம்
மறுகின் மறுகும் மருண்டு.

1140. யாம்கண்ணின் காண நகுப அறிவில்லார்
யாம்பட்ட தாம்படா ஆறு.

Monday, April 23, 2012

113 . காதற்சிறப்புரைத்தல்

1121. பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயிறு ஊறிய நீர்.

1122. உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன
மடந்தையொடு எம்மிடை நட்பு.

1123. கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும்
திருநுதற்கு இல்லை இடம்.

1124. வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல்
அதற்கன்னள் நீங்கும் இடத்து.

1125. உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன்
ஒள்ளமர்க் கண்ணாள் குணம்.

1126. கண்ணுள்ளின் போகார் இமைப்பின் பருகுவரா
நுண்ணியர்எம் காத லவர்.

1127. கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்
எழுதேம் கரப்பாக்கு அறிந்து.

1128. நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்
அஞ்சுதும் வேபாக் கறிந்து.

1129. இமைப்பின் கரப்பாக்கு அறிவல் அனைத்திற்கே
ஏதிலர் என்னும்இவ் வூர்.

1130. உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர்
ஏதிலர் என்னும்இவ் வூர்.

Sunday, April 22, 2012

112 . நலம்புனைந்துரைத்தல்

1111. நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்
மென்னீரள் யாம்வீழ் பவள்.

1112. மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்
பலர்காணும் பூவொக்கும் என்று.

1113. முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்
வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு.

1114. காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்
மாணிழை கண்ணொவ்வேம் என்று.

1115. அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுகப்பிற்கு
நல்ல படாஅ பறை.

1116. மதியும் மடந்தை முகனும் அறியா
பதியின் கலங்கிய மீன்.

1117. அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல
மறுவுண்டோ மாதர் முகத்து.

1118. மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்
காதலை வாழி மதி.

1119. மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்
பலர்காணத் தோன்றல் மதி.

1120. அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம்.

Saturday, April 21, 2012

111 . புணர்ச்சிமகிழ்தல்

1101. கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள.

1102. பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
தன்நோய்க்குத் தானே மருந்து.

1103. தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு.

1104. நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்
தீயாண்டுப் பெற்றாள் இவள்.

1105. வேட்ட பொழுதின் அவையவை போலுமே
தோட்டார் கதுப்பினாள் தோள்.

1106. உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு
அமிழ்தின் இயன்றன தோள்.

1107. தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால்
அம்மா அரிவை முயக்கு.

1108. வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை
போழப் படாஅ முயக்கு.

1109. ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்
கூடியார் பெற்ற பயன்.

1110. அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்
செறிதோறும் சேயிழை மாட்டு.

Friday, April 20, 2012

110 . குறிப்பறிதல்

1091. இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து.

1092. கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்
செம்பாகம் அன்று பெரிது.

1093. நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்
யாப்பினுள் அட்டிய நீர்.

1094. யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்.

1095. குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண்
சிறக்கணித்தாள் போல நகும்

1096. உறாஅ தவர்போல் சொலினும் செறாஅர்சொல்
ஒல்லை உணரப் படும்.

1097. செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்
உறாஅர்போன்று உற்றார் குறிப்பு.

1098. அசையியற்கு உண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப்
பசையினள் பைய நகும்.

1099. ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
காதலார் கண்ணே உள.

1100. கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல.
   

Thursday, April 19, 2012

109 . தகையணங்குறுத்தல்

1081.  அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும்என் நெஞ்சு.

1082. நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக்கொண் டன்ன துடைத்து.

1083. பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்
பெண்டகையால் பேரமர்க் கட்டு.

1084. கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்
பேதைக்கு அமர்த்தன கண்.

1085. கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
நோக்கமிம் மூன்றும் உடைத்து.

1086. கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்
செய்யல மன்இவள் கண்.

1087. கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில்.

1088. ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்
நண்ணாரும் உட்குமென் பீடு.

1089. பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்கு
அணியெவனோ ஏதில தந்து.

1090. உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல்
கண்டார் மகிழ்செய்தல் இன்று.

Wednesday, April 18, 2012

108 . கயமை

1071. மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்ட தில்.

1072. நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்
நெஞ்சத்து அவலம் இலர்.

1073. தேவர் அனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தொழுக லான்.

1074. அகப்பட்டி ஆவாரைக் காணின் அவர஧ன்
மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ்.

1075. அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்
அவாவுண்டேல் உண்டாம் சிறிது.

1076. அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட
மறைபிறர்க்கு உய்த்துரைக்க லான்.

1077. ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும்
கூன்கையர் அல்லா தவர்க்கு.

1078. சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்
கொல்லப் பயன்படும் கீழ்.

1079. உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்
வடுக்காண வற்றாகும் கீழ்.

1080. எற்றிற் குரியர் கயவரொன்று உற்றக்கால்
விற்றற்கு உரியர் விரைந்து.

Tuesday, April 17, 2012

107 . இரவச்சம்

1061. கரவாது உவந்தீயும் கண்ணன்னார் கண்ணும்
இரவாமை கோடி உறும்.

1062. இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்.

1063. இன்மை இடும்பை இரந்துதீர் வாமென்னும்
வன்மையின் வன்பாட்ட தில்.

1064. இடமெல்லாம் கொள்ளாத் தகைத்தே இடமில்லாக்
காலும் இரவொல்லாச் சால்பு.

1065. தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்தது
உண்ணலின் ஊங்கினிய தில்.

1066. ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு
இரவின் இளிவந்த தில்.

1067. இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின்
கரப்பார் இரவன்மின் என்று.

1068. இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும்
பார்தாக்கப் பக்கு விடும்.

1069. இரவுள்ள உள்ளம் உருகும் கரவுள்ள
உள்ளதூஉம் இன்றிக் கெடும்.

1070. கரப்பவர்க்கு யாங்கொளிக்கும் கொல்லோ இரப்பவர்
சொல்லாடப் போஒம் உயிர்.

Monday, April 16, 2012

106 . இரவு

1051. இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின்
அவர்பழி தம்பழி அன்று.

1052. இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை
துன்பம் உறாஅ வரின்.

1053. கரப்பிலா நெஞ்சின் கடனறிவார் முன்நின்று
இரப்புமோ ரேஎர் உடைத்து.

1054. இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்
கனவிலும் தேற்றாதார் மாட்டு.

1055. கரப்பிலார் வையகத்து உண்மையால் கண்ணின்று
இரப்பவர் மேற்கொள் வது.

1056. கரப்பிடும்பை யில்லாரைக் காணின் நிரப்பிடும்பை
எல்லாம் ஒருங்கு கெடும்.

1057. இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம்
உள்ளுள் உவப்பது உடைத்து.

1058. இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம்
மரப்பாவை சென்றுவந் தற்று.

1059. ஈவார்கண் என்னுண்டாம் தோற்றம் இரந்துகோள்
மேவார் இலாஅக் கடை.

1060. இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை
தானேயும் சாலும் கரி.

Sunday, April 15, 2012

105 . நல்குரவு

1041. இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா தது.

1042. இன்மை எனவொரு பாவி மறுமையும்
இம்மையும் இன்றி வரும்.

1043. தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக
நல்குரவு என்னும் நசை.

1044. இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த
சொற்பிறக்கும் சோர்வு தரும்.

1045. நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத்
துன்பங்கள் சென்று படும்.

1046. நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்
சொற்பொருள் சோர்வு படும்.

1047. அறஞ்சாரா நல்குரவு ஈன்றதா யானும்
பிறன்போல நோக்கப் படும்.

1048. இன்றும் வருவது கொல்லோ நெருநலும்
கொன்றது போலும் நிரப்பு.

1049. நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்
யாதொன்றும் கண்பாடு அரிது.

1050. துப்புர வில்லார் துவரத் துறவாமை
உப்பிற்கும் காடிக்கும் கூற்று.

Saturday, April 14, 2012

104 . உழவு

1031. சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை.

1032. உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து.

1033. உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்.

1034. பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்
அலகுடை நீழ லவர்.

1035. இரவார் இரப்பார்க்கொன்று ஈவர் கரவாது
கைசெய்தூண் மாலை யவர்.

1036. உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டேம்என் பார்க்கும் நிலை.

1037. தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும்.

1038. ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்
நீரினும் நன்றதன் காப்பு.

1039. செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து
இல்லாளின் ஊடி விடும்.

1040. இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும்.

Friday, April 13, 2012

103 . குடிசெயல்வகை

1021. கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும்
பெருமையின் பீடுடையது இல்.

1022. ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின்
நீள்வினையால் நீளும் குடி.

1023. குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான்முந் துறும்.

1024. சூழாமல் தானே முடிவெய்தும் தம்குடியைத்
தாழாது உஞற்று பவர்க்கு.

1025. குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்
சுற்றமாச் சுற்றும் உலகு.

1026. நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த
இல்லாண்மை ஆக்கிக் கொளல்.

1027. அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும்
ஆற்றுவார் மேற்றே பொறை.

1028. குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து
மானங் கருதக் கெடும்.

1029. இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக்
குற்ற மறைப்பான் உடம்பு.

1030. இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்தூன்றும்
நல்லாள் இலாத குடி.
   

Thursday, April 12, 2012

102 . நாணுடைமை

1011. கருமத்தால் நாணுதல் நாணுந் திருநுதல்
நல்லவர் நாணுப் பிற.

1012. ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல
நாணுடைமை மாந்தர் சிறப்பு.

1013. ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாண்என்னும்
நன்மை குறித்தது சால்பு.

1014. அணிஅன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அஃதின்றேல்
பிணிஅன்றோ பீடு நடை.

1015. பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்கு
உறைபதி என்னும் உலகு.

1016. நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம்
பேணலர் மேலா யவர்.

1017. நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால்
நாண்துறவார் நாணாள் பவர்.

1018. பிறர்நாணத் தக்கது தான்நாணா னாயின்
அறம்நாணத் தக்கது உடைத்து.

1019. குலஞ்சுடும் கொள்கை பிழைப்பின் நலஞ்சுடும்
நாணின்மை நின்றக் கடை.

1020. நாண்அகத் தில்லார் இயக்கம் மரப்பாவை
நாணால் உயிர்மருட்டி அற்று.

Wednesday, April 11, 2012

101 . நன்றியில்செல்வம்

1001.  வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்
செத்தான் செயக்கிடந்தது இல்.

1002.  பொருளானாம் எல்லாமென்று ஈயாது இவறும்
மருளானாம் மாணாப் பிறப்பு

1003. ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்
தோற்றம் நிலக்குப் பொறை.

1004. எச்சமென்று என்எண்ணுங் கொல்லோ ஒருவரால்
நச்சப் படாஅ தவன்.

1005. கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய
கோடியுண் டாயினும் இல்.

1006. ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்கொன்று
ஈதல் இயல்பிலா தான்.

1007. அற்றார்க்கொன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம்
பெற்றாள் தமியள்மூத் தற்று.

1008. நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்
நச்சு மரம்பழுத் தற்று.

1009. அன்பொரீஇத் தற்செற்று அறநோக்காது ஈட்டிய
ஒண்பொருள் கொள்வார் பிறர்.

1010. சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி
வறங்கூர்ந் தனையது உடைத்து.

Tuesday, April 10, 2012

100 . பண்புடைமை

991. எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்
பண்புடைமை என்னும் வழக்கு.

992. அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்
பண்புடைமை என்னும் வழக்கு.

993. உறுப்பொத்தல் மக்களொப்பு அன்றால் வெறுத்தக்க
பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு.

994. யனொடு நன்றி புரிந்த பயனுடையார்
பண்புபா ராட்டும் உலகு.

995. நகையுள்ளும் இன்னா திகழ்ச்சி பகையுள்ளும்
பண்புள பாடறிவார் மாட்டு.

996. பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல்
மண்புக்கு மாய்வது மன்.

997. அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
மக்கட்பண்பு இல்லா தவர்.

998. நண்பாற்றார் ஆகி நயமில செய்வார்க்கும்
பண்பாற்றார் ஆதல் கடை.

999. நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன்று இருள்.

1000. பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
கலந்தீமை யால்திரிந் தற்று.

Monday, April 9, 2012

99 . சான்றாண்மை

981. கடன்என்ப நல்லவை எல்லாம் கடன்அறிந்து
சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு.

982. குணநலம் சான்றோர் நலனே பிறநலம்
எந்நலத்து உள்ளதூஉம் அன்று.

983. அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு
ஐந்துசால் ஊன்றிய தூண்.

984. கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை
சொல்லா நலத்தது சால்பு.

985. ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்
மாற்றாரை மாற்றும் படை.

986. சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி
துலையல்லார் கண்ணும் கொளல்.

987. இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு.

988. இன்மை ஒருவற்கு இனிவன்று சால்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின்.

989. ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு
ஆழி எனப்படு வார்.

990. சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான்
தாங்காது மன்னோ பொறை.

Sunday, April 8, 2012

98 . பெருமை

971. ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இளிஒருவற்கு
அஃதிறந்து வாழ்தும் எனல்.

972. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.

973. மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்
கீழல்லார் கீழல் லவர்.

974. ஒருமை மகளிரே போலப் பெருமையும்
தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு.

975. பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின்
அருமை உடைய செயல்.

976. சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப்
பேணிக்கொள் வேம்என்னும் நோக்கு.

977. இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புந்தான்
சீரல் லவர்கண் படின்.

978. பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து.

979. பெருமை பெருமிதம் இன்மை சிறுமை
பெருமிதம் ஊர்ந்து விடல்.

980. அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்
குற்றமே கூறி விடும்.

Saturday, April 7, 2012

97 . மானம்

961. இன்றி அமையாச் சிறப்பின ஆயினும்
குன்ற வருப விடல்.

962. சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு
பேராண்மை வேண்டு பவர்.

963. பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
சுருக்கத்து வேண்டும் உயர்வு.

964. தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை.

965. குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ
குன்றி அனைய செயின்.

966. புகழ்இன்றால் புத்தேள்நாட்டு உய்யாதால் என்மற்று
இகழ்வார்பின் சென்று நிலை.

967. ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே
கெட்டான் எனப்படுதல் நன்று.

968. மருந்தோமற்று ஊன்ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமை
பீடழிய வந்த இடத்து.

969. மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்.

970. இளிவரின் வாழாத மானம் உடையார்
ஒளிதொழுது ஏத்தும் உலகு.

Friday, April 6, 2012

96 . குடிமை

951. இற்பிறந்தார் கண்அல்லது இல்லை இயல்பாகச்
செப்பமும் நாணும் ஒருங்கு.

952. ஒழுக்கமும் வாய்மையும் நாணும்இம் மூன்றும்
இழுக்கார் குடிப்பிறந் தார்.

953. நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும்
வகையென்ப வாய்மைக் குடிக்கு.

954. அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்
குன்றுவ செய்தல் இலர்.

955. வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி
பண்பில் தலைப்பிரிதல் இன்று.

956. சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற
குலம்பற்றி வாழ்தும்என் பார்.

957. குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்
மதிக்கண் மறுப்போல் உயர்ந்து.

958. நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்
குலத்தின்கண் ஐயப் படும்.

959. நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல்.

960. நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம்
வேண்டின் வேண்டுக யார்க்கும் பணிவு.

Thursday, April 5, 2012

95 . மருந்து

941. மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று.

942. மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்.

943. அற்றால் அறவறிந்து உண்க அஃதுடம்பு
பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு.

944. அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல
துய்க்க துவரப் பசித்து.

945. மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு.

946. இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
கழிபேர் இரையான்கண் நோய்.

947. தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்
நோயள வின்றிப் படும்.

948. நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.

949. உற்றான் அளவும் பிணியளவும் காலமும்
கற்றான் கருதிச் செயல்.

950. உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று
அப்பால் நாற்கூற்றே மருந்து.

Wednesday, April 4, 2012

94 . சூது

931. வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்
தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று.

932. ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல்
நன்றெய்தி வாழ்வதோர் ஆறு.

933. உருளாயம் ஓவாது கூறின் பொருளாயம்
போஒய்ப் புறமே படும்.

934. சிறுமை பலசெய்து சீரழிக்கும் சூதின்
வறுமை தருவதொன்று இல்.

935. கவறும் கழகமும் கையும் தருக்கி
இவறியார் இல்லாகி யார்.

936. அகடாரார் அல்லல் உழப்பர்சூ தென்னும்
முகடியான் மூடப்பட் டார்.

937. பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்
கழகத்துக் காலை புகின்.

938. பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்து
அல்லல் உழப்பிக்கும் சூது.

939. உடைசெல்வம் ஊண்ஒளி கல்விஎன்று ஐந்தும்
அடையாவாம் ஆயங் கொளின்.

940. இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம்
உழத்தொறூஉம் காதற்று உயிர்.

Tuesday, April 3, 2012

93 . கள்ளுண்ணாமை

921. உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்
கட்காதல் கொண்டொழுகு வார்.

922. உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான்
எண்ணப் படவேண்டா தார்.

923. ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்
சான்றோர் முகத்துக் களி.

924. நாண்என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும்
பேணாப் பெருங்குற்றத் தார்க்கு.

925. கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து
மெய்யறி யாமை கொளல்.

926. துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.

927. உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்
கள்ளொற்றிக் கண்சாய் பவர்3

928. களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து
ஒளித்ததூஉம் ஆங்கே மிகும்.

929. களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்
குளித்தானைத் தீத்துரீஇ அற்று.

930. கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால்
உள்ளான்கொல் உண்டதன் சோர்வு.

Monday, April 2, 2012

92 . வரைவின்மகளிர்

911. அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார்
இன்சொல் இழுக்குத் தரும்.

912. பயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர்
நயன்தூக்கி நள்ளா விடல்.

913. பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்
ஏதில் பிணந்தழீஇ அற்று.

914. பொருட்பொருளார் புன்னலந் தோயார் அருட்பொருள்
ஆயும் அறிவி னவர்.

915.பொதுநலத்தார் புன்னலம் தோயார் மதிநலத்தின்
மாண்ட அறிவி னவர்.

916. தந்நலம் பாரிப்பார் தோயார் தகைசெருக்கிப்
புன்னலம் பாரிப்பார் தோள்.

917. நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வார் பிறநெஞ்சிற்
பேணிப் புணர்பவர் தோள்.

918. ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கென்ப
மாய மகளிர் முயக்கு.

919. வரைவிலா மாணிழையார் மென்தோள் புரையிலாப்
பூரியர்கள் ஆழும் அளறு.

920. இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்
திருநீக்கப் பட்டார் தொடர்பு.
   

Sunday, April 1, 2012

91 . பெண்வழிச்சேறல்

901. மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழையார்
வேண்டாப் பொருளும் அது.

902. பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர்
நாணாக நாணுத் தரும்.

903. இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும்
நல்லாருள் நாணுத் தரும்.

904. மனையாளை அஞ்சும் மறுமையி லாளன்
வினையாண்மை வீறெய்த லின்று.

905. இல்லாளை அஞ்சுவான் அஞ்சுமற் றெஞ்ஞான்றும்
நல்லார்க்கு நல்ல செயல்.

906. இமையாரின் வாழினும் பாடிலரே இல்லாள்
அமையார்தோள் அஞ்சு பவர்.

907. பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப்
பெண்ணே பெருமை உடைத்து.

908. நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள்
பெட்டாங்கு ஒழுகு பவர்.

909. அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும்
பெண்ஏவல் செய்வார்கண் இல்.

910. எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க்கு எஞ்ஞான்றும்
பெண்சேர்ந்தாம் பேதைமை இல்.

Saturday, March 31, 2012

90 . பெரியாரைப் பிழையாமை

891. ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்
போற்றலுள் எல்லாம் தலை.

892. பெரியாரைப் பேணாது ஒழுகிற் பெரியாரால்
பேரா இடும்பை தரும்.

893. கெடல்வேண்டின் கேளாது செய்க அடல்வேண்டின்
ஆற்று பவர்கண் இழுக்கு.

894. கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு
ஆற்றாதார் இன்னா செயல்.

895. யாண்டுச்சென்று யாண்டும் உளராகார் வெந்துப்பின்
வேந்து செறப்பட் டவர்.

896. எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்
பெரியார்ப் பிழைத்தொழுகு வார்.

897. வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம்
தகைமாண்ட தக்கார் செறின்.

898. குன்றன்னார் குன்ற மதிப்பின் குடியொடு
நின்றன்னார் மாய்வர் நிலத்து.

899. ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து
வேந்தனும் வேந்து கெடும்.

900. இறந்தமைந்த சார்புடையர் ஆயினும் உய்யார்
சிறந்தமைந்த சீரார் செறின்.

Friday, March 30, 2012

89 . உட்பகை

881. நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும்
இன்னாவாம் இன்னா செயின்.

882. வாள்போல பகைவரை அஞ்சற்க அஞ்சுக
கேள்போல் பகைவர் தொடர்பு.

883. உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்து
மட்பகையின் மாணத் தெறும்.

884. மனமாணா உட்பகை தோன்றின் இனமாணா
ஏதம் பலவும் தரும்.

885. உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான்
ஏதம் பலவும் தரும்.

886. ஒன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும்
பொன்றாமை ஒன்றல் அரிது.

887. செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் கூடாதே
உட்பகை உற்ற குடி.

888. அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொருது
உட்பகை உற்ற குடி.

889. எட்பக வன்ன சிறுமைத்தே ஆயினும்
உட்பகை உள்ளதாங் கேடு.

890. உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்
பாம்போடு உடனுறைந் தற்று.

Thursday, March 29, 2012

88 . பகைத்திறந்தெரிதல்

871. பகைஎன்னும் பண்பி லதனை ஒருவன்
நகையேயும் வேண்டற்பாற்று அன்று.

872. வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க
சொல்லேர் உழவர் பகை.

873. ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப்
பல்லார் பகைகொள் பவன்.

874. பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன்
தகைமைக்கண் தங்கிற்று உலகு.

875. தன்துணை இன்றால் பகையிரண்டால் தான்ஒருவன்
இன்துணையாக் கொள்கவற்றின் ஒன்று.

876. தேறினும் தேறா விடினும் அழிவின்கண்
தேறான் பகாஅன் விடல்.

877. நோவற்க நொந்தது அறியார்க்கு மேவற்க
மென்மை பகைவர் அகத்து.

878. வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும்
பகைவர்கண் பட்ட செருக்கு.

879. இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
கைகொல்லும் காழ்த்த இடத்து.

880. உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர்
செம்மல் சிதைக்கலா தார்.

Wednesday, March 28, 2012

87 . பகைமாட்சி

861. வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா
மெலியார்மேல் மேக பகை.

862. அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்துவ்வான்
என்பரியும் ஏதிலான் துப்பு.

863. அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான்
தஞ்சம் எளியன் பகைக்கு.

864. நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும்
யாங்கணும் யார்க்கும் எளிது.

865. வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்
பண்பிலன் பற்றார்க்கு இனிது.

866. காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான்
பேணாமை பேணப் படும்.

867. கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற அடுத்திருந்து
மாணாத செய்வான் பகை.

868. குணனிலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க்கு
இனனிலனாம் ஏமாப் புடைத்து.

869. செறுவார்க்குச் சேணிகவா இன்பம் அறிவிலா
அஞ்சும் பகைவர்ப் பெறின்.

870. கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும்
ஒல்லானை ஒல்லா தொளி.

Tuesday, March 27, 2012

86 . இகல்

851. இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும்
பண்பின்மை பார஧க்கும் நோய்.

852. பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி
இன்னாசெய் யாமை தலை.

853. இகலென்னும் எவ்வநோய் நீக்கின் தவலில்லாத்
தாவில் விளக்கம் தரும்.

854. இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும்
துன்பத்துள் துன்பங் கெடின்.

855. இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே
மிக்லூக்கும் தன்மை யவர்.

856. இகலின் மிகலினிது என்பவன் வாழ்க்கை
தவலும் கெடலும் நணித்து.

857. மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல்
இன்னா அறிவி னவர்.

858. இகலிற்கு எதிர்சாய்தல் ஆக்கம் அதனை
மிக்லூக்கின் ஊக்குமாம் கேடு.

859. இகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனை
மிகல்காணும் கேடு தரற்கு.

860. இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம்
நன்னயம் என்னும் செருக்கு.

Monday, March 26, 2012

85 . புல்லறிவாண்மை

841. அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை
இன்மையா வையா துலகு.

842. அறிவிலான் நெஞ்சுவந்து ஈதல் பிறிதியாதும்
இல்லை பெறுவான் தவம்.

843. அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழை
செறுவார்க்கும் செய்தல் அரிது.

844. வெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மை
உடையம்யாம் என்னும் செருக்கு.

845. கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற
வல்லதூஉம் ஐயம் தரும்.

846. அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின்
குற்றம் மறையா வழி.

847. அருமறை சோரும் அறிவிலான் செய்யும்
பெருமிறை தானே தனக்கு.

848. ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்
போஒம் அளவுமோர் நோய்.

849. காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்
கண்டானாம் தான்கண்ட வாறு.

850. உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து
அலகையா வைக்கப் படும்.

Sunday, March 25, 2012

84 . பேதைமை

831. பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு
ஊதியம் போக விடல்.

832. பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை
கையல்ல தன்கட் செயல்.

833. நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்
பேணாமை பேதை தொழில்

834. ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்
பேதையின் பேதையார் இல்.

835. ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்
தான்புக் கழுந்தும் அளறு.

836. பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப்
பேதை வினைமேற் கொளின்.

837. ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை.

838. மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன்
கையொன்று உடைமை பெறின்.

839. பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண்
பீழை தருவதொன் றில்.

840. கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர்
குழாஅத்துப் பேதை புகல்.

Saturday, March 24, 2012

83 . கூடாநட்பு

821. சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை
நேரா நிரந்தவர் நட்பு.

822. இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர்
மனம்போல வேறு படும்.

823.பலநல்ல கற்றக் கடைத்து மனநல்லர்
ஆகுதல் மாணார்க் கரிது.

824. முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா
வஞ்சரை அஞ்சப் படும்.

825. மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும்
சொல்லினால் தேறற்பாற்று அன்று.

826. நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்
ஒல்லை உணரப் படும்.

827. சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம்
தீங்கு குறித்தமை யான்.

828. தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்
அழுதகண் ணீரும் அனைத்து.

829. மிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்து
நட்பினுள் சாப்புல்லற் பாற்று.

830. பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்டு
அகநட்பு ஒரீஇ விடல்.

Friday, March 23, 2012

82 . தீ நட்பு

811. பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை
பெருகலிற் குன்றல் இனிது.

812. உறின்நட்டு அறின்ஙருஉம் ஒப்பிலார் கேண்மை
பெறினும் இழப்பினும் என்.

813. உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது
கொள்வாரும் கள்வரும் நேர்.

814. அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார்
தமரின் தனிமை தலை.

815. செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை
எய்தலின் எய்தாமை நன்று.

816. பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார்
ஏதின்மை கோடி உறும்.

817. நகைவகைய ராகிய நட்பின் பகைவரால்
பத்தடுத்த கோடி உறும்.

818. ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை
சொல்லாடார் சோர விடல்.

819. கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு
சொல்வேறு பட்டார் தொடர்பு.

820. எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ
மன்றில் பழிப்பார் தொடர்பு.

Thursday, March 22, 2012

81 . பழைமை

801. பழைமை எனப்படுவது யாதெனின் யாதும்
கிழமையைக் கீழ்ந்திடா நட்பு.

802. நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற்கு
உப்பாதல் சான்றோர் கடன்.

803. பழகிய நட்பெவன் செய்யுங் கெழுதகைமை
செய்தாங்கு அமையாக் கடை.

804. விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையாற்
கேளாது நட்டார் செயின்.

805. பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க
நோதக்க நட்டார் செயின்.

806. எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும்
தொல்லைக்கண் நின்றார் தொடர்பு.

807. அழிவந்த செய்யினும் அன்பறார் அன்பின்
வழிவந்த கேண்மை யவர்.

808. கேளிழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு
நாளிழுக்கம் நட்டார் செயின்.

809. கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை
விடாஅர் விழையும் உலகு.

810. விழையார் விழையப் படுப பழையார்கண்
பண்பின் தலைப்பிரியா தார்.

Wednesday, March 21, 2012

80 . நட்பாராய்தல்

791.  நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்
வீடில்லை நட்பாள் பவர்க்கு.

792. ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான்சாம் துயரம் தரும்.

793. குணமும் குடிமையும் குற்றமும் குன்றா
இனனும் அறிந்தியாக்க நட்பு.

794. குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்
கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு.

795. அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கறிய
வல்லார்நடபு ஆய்ந்து கொளல்.

796. கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை
நீட்டி அளப்பதோர் கோல்.

797. ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார்
கேண்மை ஒரீஇ விடல்.

798. உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க
அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு.

799.கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை
உள்ளினும் உள்ளஞ் சுடும்.

800. மருவுக மாசற்றார் கேண்மைஒன் றீத்தும்
ஒருவுக ஒப்பிலார் நட்பு.

Tuesday, March 20, 2012

79 . நட்பு

781. செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு.

782. நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்னீர பேதையார் நட்பு.

783. நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு.

784. நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்செனறு இடித்தற் பொருட்டு.

785.புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாங் கிழமை தரும்.

786. முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு.

787. அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு.

788. உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.

789. நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை.

790. இனையர் இவரெமக்கு இன்னம்யாம் என்று
புனையினும் புல்லென்னும் நட்பு.

Monday, March 19, 2012

78 . படைச்செருக்கு

771. என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை
முன்நின்று கல்நின் றவர்.

772. கான முயலெய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது.

773. பேராண்மை என்ப தறுகண்ஒன் றுற்றக்கால்
ஊராண்மை மற்றதன் எஃகு.

774. கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும்.

775. விழித்தகண் வேல்கொண டெறிய அழித்திமைப்பின்
ஒட்டன்றோ வன்க ணவர்க்கு.

776. விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள்
வைக்கும்தன் நாளை எடுத்து.

777. சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்
கழல்யாப்புக் காரிகை நீர்த்து.

778. உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன்
செறினும் சீர்குன்றல் இலர்.

779. இழைத்தது இகவாமைச் சாவாரை யாரே
பிழைத்தது ஒறுக்கிற் பவர்.

780. புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு
இரந்துகோள் தக்கது உடைத்து.

Sunday, March 18, 2012

77 . படைமாட்சி

761. உறுப்பமைந்து ஊறஞ்சா வெல்படை வேந்தன்
வெறுக்கையுள் எல்லாம் தலை.

762. உலைவிடத்து ஊறஞ்சா வன்கண் தொலைவிடத்துத்
தொல்படைக் கல்லால் அரிது.

763. ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை
நாகம் உயிர்ப்பக் கெடும்.

764. அழிவின்றி அறைபோகா தாகி வழிவந்த
வன்க ணதுவே படை.

765. கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்
ஆற்ற லதுவே படை.

766. மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்
எனநான்கே ஏமம் படைக்கு.

767. தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த
போர்தாங்கும் தன்மை அறிந்து.

768. அடல்தகையும் ஆற்றலும் இல்லெனினும் தானை
படைத்தகையால் பாடு பெறும்.

769. சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும்
இல்லாயின் வெல்லும் படை.

770. நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை
தலைமக்கள் இல்வழி இல்.

Saturday, March 17, 2012

76 . பொருள்செயல்வகை

751. பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்லது இல்லை பொருள்.

752. இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பு.

753. பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்
எண்ணிய தேயத்துச் சென்று.

754. அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
தீதின்றி வந்த பொருள்.

755. அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்
புல்லார் புரள விடல்.

756. உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த்
தெறுபொருளும் வேந்தன் பொருள்.

757. அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்
செல்வச் செவிலியால் உண்டு.

758. குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று
உண்டாகச் செய்வான் வினை.

759. செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்
எஃகதனிற் கூரிய தில்.

760. ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள்
ஏனை இரண்டும் ஒருங்கு.

Friday, March 16, 2012

75 . அரண்

741. ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற்
போற்று பவர்க்கும் பொருள்.

742. மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடைய தரண்.

743. உயர்வகலம் திண்மை அருமைஇந் நான்கின்
அமைவரண் என்றுரைக்கும் நூல்.

744. சிறுகாப்பிற் பேரிடத்த தாகி உறுபகை
ஊக்கம் அழிப்ப தரண்.

745. கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி அகத்தார்
நிலைக்கெளிதாம் நீரது அரண்.

746. எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்துதவும்
நல்லாள் உடையது அரண்.

747. முற்றியும் முற்றா தெறிந்தும் அறைப்படுத்தும்
பற்றற் கரியது அரண்.

748. முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப்
பற்றியார் வெல்வது அரண்.

749. முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து
வீறெய்தி மாண்ட தரண்.

750. எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி
இல்லார்கண் இல்லது அரண்.   

Thursday, March 15, 2012

74 . நாடு

731. தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
செல்வரும் சேர்வது நாடு.

732. பெரும்பொருளால் பெட்டக்க தாகி அருங்கேட்டால்
ஆற்ற விளைவது நாடு.

733. பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு
இறையொருங்கு நேர்வது நாடு.

734. உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேரா தியல்வது நாடு.

735. பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்
கொல்குறும்பும் இல்லத

736. கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா
நாடென்ப நாட்டின் தலை.

737. இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு.

738. பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிவ் வைந்து.

739. நாடென்ப நாடா வளத்தன நாடல்ல
நாட வளந்தரு நாடு.

740. ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே
வேந்தமை வில்லாத நாடு.

Wednesday, March 14, 2012

73 . அவையஞ்சாமை

721. வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர்.

722. கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்
கற்ற செலச்சொல்லு வார்.

723. பகையகத்துச் சாவார் எளியர் அரியர்
அவையகத்து அஞ்சா தவர்.

724. கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற
மிக்காருள் மிக்க கொளல்.

725. ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா
மாற்றங் கொடுத்தற் பொருட்டு.

726. வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென்
நுண்ணவை அஞ்சு பவர்க்கு.

727. பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து
அஞ்சு மவன்கற்ற நூல்.

728. பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள்
நன்கு செலச்சொல்லா தார்.

729. கல்லா தவரின் கடையென்ப கற்றறிந்தும்
நல்லா ரவையஞ்சு வார்.

730. உளரெனினும் இல்லாரொடு ஒப்பர் களன்அஞ்சிக்
கற்ற செலச்சொல்லா தார்.