திருக்குறள் (Thirukkural) உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். இதனை இயற்றியவர் திருவள்ளுவர் என்று அறியப்படுபவர். இதில் 1330 குறள்கள் பத்து பத்தாக 133 அதிகாரங்களின் கீழ் தொகுக்கப் பெற்றுள்ளன, திருக்குறள் 14000சொற்களும், 42192 எழுத்துக்களும் கொண்டது. ஆனால் ஓர் இடத்தில் கூட தமிழ் என்ற வார்த்தையை திருவள்ளுவர் பயன்படுத்தவில்லை. திருக்குறள் சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கிறது. இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மாந்தர்கள் தம் அகவாழ்விலும் சுமுகமாக கூடி வாழவும், புற வாழ்விலும் இன்பமுடனும் இசைவுடனும் நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது. இந்நூல் அறம், பொருள், இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும் பிரிவுகளாய் (முப்பால்) பிரித்தும் அழகுடன் இணைத்தும் கோர்த்தும் விளக்குகிறது. அறத்துப்பாலில் 38அதிகாரங்களும், பொருட்பாலில் 70அதிகாரங்களும், இன்பத்துப்பாலில் 25 அதிகாரங்களும் உள்ளன. குறிப்பறிதல் என்ற அதிகாரம் மட்டும் இருமுறை வந்துள்ளது.
வாழ்வியலின் எல்லா அங்கங்களையும் திருக்குறள் கூறுவதால், அதைச் சிறப்பித்துப் பல பெயர்களால் அழைப்பர்: திருக்குறள், முப்பால், உத்தரவேதம், தெய்வநூல், பொதுமறை, பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, தமிழ் மறை, திருவள்ளுவம் என்ற பெயர்கள் அதற்குரியவை. கருத்துக்களை இன, மொழி, பாலின பேதங்களின்றி காலம் கடந்தும் பொருந்துவது போல் கூறி உள்ளதால் இந்நூல் "உலகப் பொது மறை" என்றும் அழைக்கப்படுகிறது திருக்குறள் - இதற்குப் பலர் உரை எழுதியுள்ளனர். அவற்றில் புகழ் வாய்ந்ததாக விளங்குவதும் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டதும் பரிமேலழகர் உரைதான்.
அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல்களில் மூன்றாம் இடத்தை திருக்குறள் வகிக்கிறது. இதுவரை 80 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. நரிக்குறவர் பேசும் `வக்ர போலி` என்ற மொழியிலும் கூட ஆகும்.
தெய்வநூலில், தமிழ் எழுத்துகள் 247இல் 37 எழுத்துக்கள் மட்டுமே இடம் பெறவில்லை. இதில் பயன்படுத்தப்படாத ஒரே உயிர் எழுத்து `ஒள` என்பதாகும்.
திருக்குறளில் இடம்பெற்றுள்ள இரு மலர்கள் அனிச்சமலர், குவளை மலராகும். இரு மரங்கள் பனை, மூங்கிலாகும். இதில் இடம்பெற்றுள்ள ஒரே பழம், நெருஞ்சிப்பழம். ஒரே விதை குன்றிமணியாகும்.
No comments:
Post a Comment